யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி கிழக்கு பகுதியில் 6 அடி நீளமான அரியவகை வெள்ளை நாகம் ஒன்று பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
பொலி கண்டி கந்தவன கோவில் ஆதீன தர்மகத்தவான செவாலியர் சிவஜோகநாயகி இராமநாதன் அவர்களது தொட்டக் கிணற்றில் இருந்தே குறித்த பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.
தோட்டத்திற்கு தண்ணீர் இறைப்பதற்காக சென்ற போது அக் கிணற்றுக்குள் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அப்பகுதி மக்களால் அப் பாம்பு கிணற்றில் இருந்து பாதுகாப்பான முறையில் வெளியில் எடுக்கப்பட்டது.
பின்னர் அப்பாம்பினை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.