அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் (கோப்) தலைவராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்னெத்திக்குப் பதிலாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை நியமிக்க சிரேஷ்ட அமைச்சர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்காக வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடர்களை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பாராளுமன்ற கூட்டத் தொடர்களை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் கூட்டத்தை ஆரம்பிக்கும் போது சபைகள் அனைத்துக்கும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதன் படி கோப் அமைப்பினது தலைவரையும் நீக்கிவிட்டு புதிய ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க உள்ளக வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.