கூரிய ஆயுதங்களை காண்பித்தும் பொதுமக்களை காயப்படுத்தியும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐவர் அத்துருகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் தடுப்பு விசாரணை உத்தரவிற்கமைய காவல்துறையினரால் அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அத்துருகிரிய பகுதியில் ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களின் வசமிருந்த 5 வாள்கள், ரிவோல்வர் துப்பாக்கி,தோட்டாக்கள், போலி துப்பாக்கி மற்றும் 2 உந்துருளிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் நேற்று கடுவலை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.