பிரித்தானிய பிரதமருக்கு ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் கண்டனம்

424 0

Home Secretary Theresa Mayஇலங்கை அகதி ஒருவரை நாடு கடத்த உத்தவிரவிட்டமை தொடர்பில் பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய்ஸூக்கு ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

தெரேசா மேய் உள்துறை செயலாளராக பதவி வகித்த காலப்பகுதியில் இந்த உத்தரவை பிறப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நாடுகடத்தல் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி 2013ஆம் ஆண்டு குறித்த இலங்கை அகதி தெரேசா மேயிற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

எனினும் அந்த கடிதம் உடனடியாக நிராகரிக்கப்பட்டது.

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிடும் என அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் அவரது ஆபத்துகள் குறித்து இலங்கையில் உள்ள அவரது சகோதாரியால் அனுப்பி வைக்கப்பட்டக் கடிதம் ஒன்றும், குறித்த அகதியின் கடிதத்தில் இணைக்கப்பட்டிருந்தது.

எனினும் இதனை தெரேசா மேய் நிராகரித்தமை மிகவும் தவறான தீர்மானம் என்ற ஸ்கொட்லாந்தின் சிரேஷ்ட்ட நீதிபதியான லோர்ட் போயிட் தெரிவித்துள்ளார்.