உலக பௌத்த மகா சம்மேளனத்தின் 07வது பௌத்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்துள்ள பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பில் இவ்வருட மாநாடு இலங்கையில் நடைபெறுவதுடன், 47 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 300 பிரதான மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்குபற்றுகின்றனர்.
”உலக சமாதானத்திற்கு பௌத்த சமயம்” எனும் தொனிப்பொருளின்கீழ் மாநாடு நேற்று (02) முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது. இம்மாநாடு எதிர்வரும் 07ஆம் திகதி வரை நடைபெறும்