மலையகத் தமிழர்கள் அரசமைப்பில் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டம் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
புதிய அரசமைப்புக்காக வழிநடத்தல் குழுவில் இடைக்கால அறிக்கை மீதான நான்காம் நாள் விவாதம் நேற்று அரசமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முன்மொழியப்பட்டுள்ள இரண்டாம் சபைக்கு மாகாணசபை பிரிதிநிதிகளே உள்வாங்கப்படுவார்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் சபைக்கு சிறுபான்மை சமூகங்களின் பிரநிதிகளே உள்வாங்கப்பட வேண்டும். அதற்காகவே இரண்டாம் சபை முன்மொழியப்பட்டது. இது குறித்து இணக்கப்பாட்டை காண பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்’ என்றும் கூறினார்.
புதிய அரசமைப்பில் மலையகத் தமிழர்களும் ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு. ஆனால், இடைக்கால அறிக்கையில் நாங்கள் முன்வைத்த கோரிக்கை இடம்பெறவில்லை
இடைக்கால அறிக்கையில் அனைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.யார் அந்த சிறுபான்மை இனங்கள் என்று இதில் அடையாளப்படுத்தப்படவில்லை.
இலங்கையில் நான்கு தேசிய இனத்தவர்கள் வாழ்கின்றனர் இதனை அடையாளப்படுத்துவதே எமது கோரிக்கை. இலங்கைத் தமிழர்கள் என்று மலையகத் தமிழர்களை அடையாளப்படுத்த முடியாது. காரணம் இலங்கைத் தமிழர்கள் நீண்டகாலமாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வந்தவர்கள். நாங்கள் இந்த நாட்டில் பிரஜாவுரிமைக்காகப் போராடிவந்தவர்கள்.
அதுமாத்திரமின்றி மலையக தமிழர்களுக்கென தனியான கலாசார அடையாளம் உண்டு. மலையகத் தழிழர்களுக்கு அரசமைப்பு ரீதியாக அங்கீகாரம் அளிக்கப்படும்போதுதான் அவர்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவிவித்தார்.