கல், மணல் மற்றும் மண் விநியோக நடவடிக்கைகளின் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்துள்ளார்.
கட்டுமான நடவடிக்கைகளின் போது சுற்றாடலுக்கு பாதுகாப்பான முறையில் அவற்றை பெற்றுக் கொள்வது சவாலானது என
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல், மணல் விநியோகத்தின் போது ஏற்படுகின்ற சிரமங்கள் சம்பந்தமாக தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிமல் போபகே மேலும் தெரிவித்தார்.