தொண்டமானின் பெயர் நீக்கத்திற்கு எதிராக கொட்டகலையில் ஹர்த்தால்

268 0

ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் இருந்து தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிராக இன்று கொட்டகலை நகரில் எதிர்ப்பு ஆர்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.

இவ் ஆர்பாட்டத்திற்கு கொட்டகலை நகர வர்த்தகர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தாலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமாகிய கணபதி கணகராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் திணேஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வன், இ.தொ.கா வின் இளைஞர் அணித் தலைவர் இராஜமனி பிரசாத் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கொட்டகலை பிரதேச சபைக்கருகில் ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரணி பிரதான வீதியூடாக கொட்டகலை ஆலயம் வரை வந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டமானின் பெயரை, பெயர் பலகையிலிருந்து நீக்கினாலும் மலையக மக்கள் மனங்களிலிருந்து நீக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்

Leave a comment