இந்த நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிபெறும். அதற்கான வேலைத்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் இப்பொழுதே முன்னெடுத்து வருகின்றோம் என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
ஹட்டன் நோர்வூட் பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலையக பிரதேசத்தில் மருத்துவ குணமுல்ல மரக்கன்றுகளையும், வெளிநாட்டவர்கள் விரும்பதக்க ரோஜா பூ வளர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் உலங்கு வானூர்தி மூலம் நோர்வூட் பகுதிக்கு வருகை தந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் அரசியல் அமைப்பு மாற்றங்கள் ஆரம்ப காலங்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்படாமலே முன்னெடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பிரச்சினைகளும் உருவானது. ஆனால் இன்று புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்காக முனைகின்ற பொழுது நாம் விரும்புவது இந்த நாட்டில் வாழக்கூடிய அனைத்து கலாச்சாரங்களையும், பின்பற்றி நடக்கும் மக்களுடன் அவர்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப ஒன்றிணைந்த பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுத்து அதனூடாக அரசியல் யாப்பினை கொண்டு செல்வதேயாகும்.
நமது நாட்டில் இலங்கை கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் போன்றவற்றை பின்பற்றும் மக்களுடன் மூஸ்லீம் கலாச்சாரத்தையும், பேகர் கலாச்சாரத்தையும் கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் அணைவருக்கும் உரிமைகள் கிடைக்கப்பெற்ற ஒரு அரசியல் யாப்பு மாற்றம் தேவைப்படுவதனால் அவர்களுக்கு ஏற்ப ஒரு மாற்றத்தினை கொண்டு வர வேண்டும். இது நாம் அதிகமாக விரும்புகின்றோம். இதற்கான இணக்கப்பாட்டை அனைத்து மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த அரசியல் யாப்பு மாற்றம் நிலைத்திருக்கும் என தெரிவித்த அமைச்சரிடம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என கேட்டபொழுது,
எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானத்திருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றியை ஈட்டும் என தெரிவித்த அமைச்சர் இதற்கான ஏற்பாடுகளை இப்போதே முன்னெடுத்து குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த பகுதிக்கான விஜயமானது மருத்துவ குணமுல்ல மரக்கன்றுகளை வளர்ப்பதற்கும், வெளிநாட்டவர்கள் விரும்பதக்க ரோஜா பூ கன்றுகளை வளர்ப்பதற்கும் ஏதுவான காலநிலையும், மண் வளமும் கூடிய மலையக பிரதேசத்தில் எவ்வாறு அதனை பயன்பாடு அடைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை ஆராய்வதற்கு வருகை தந்தேன். அதேவேளை பெருந்தோட்டப்பகுதிகளில் இந்த பயிர்கள் ஊடாக பயன்பாட்டை அடைவதற்கு விரும்பும் தோட்டப் பகுதியை சார்ந்தவர்ளையும் தோட்ட அதிகாரிகளிடமும் கலந்தாலோசனை நடத்த எனது விஜயம் அமைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்