ஒட்டுநர்கள் இன்றி வீதியில் பயணிக்கும் சிற்றூந்துகளை சிங்கப்பூர் பரீட்சித்து பார்த்துவருகிறது.
எனினும் இந்த சிற்றூந்துகள் சேவைகளுக்கு வர இன்னும் பல வருடங்கள் செல்லலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறித்த சிற்றூந்தில் ஓட்டுநர் ஒருவர் இருக்கின்றபோதும் அவர் அதனை செலுத்துவதில்லை.
எனினும் சிற்றூந்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின் அவற்றை சரிசெய்துக்கொள்வதற்காகவே குறித்த ஓட்டுநர் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.