உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கோரி இன்று நாடாளுமன்றில் யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இது பற்றி கொழும்பு ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்துமாறு அவை ஒத்தி வைப்பு யோசனையொன்று இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்.
ஜனநாயகத்தின் பெயரால் நாட்டை சர்வாதிகாரம் நோக்கி நகர்த்தாது, ஜனநாயக ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தியே யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பல்வேறு காரணங்களைக் காண்பித்து தோல்வி பீதி காரணமாக ஆட்சியில் இருக்கும் தரப்பினர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.