பல்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸினால் சற்று நேரத்துக்கு முன்பு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையுத்தரவினை குடிவரவு, குடியகல்வு கட்டுபாடு மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த 5 சந்தேகநபர்களுக்கும் இந்த கொலை தொடர்பில் நன்கு அறிவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவு நீதிமன்றிட்கு அறிவித்துள்ளதாகவும் இதனையடுத்தே நீதிமன்றத்தால் இந்த தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.