இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ‘எட்கா’ ஒப்பந்தமானது ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு தெரியாமல் மிகவும் திருட்டுத்தனமாக இது கைச்சாத்திடப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்த போதும் அதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யவில்லை என இந்த சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புகளை மீறி எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமானால் அனைத்து தொழிற்சங்கத்தையும் ஒன்றினைத்து பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.