யாழ்ப்பாணம் காக்கைதீவில் அமைந்துள்ள யாழ் மாநகர சபையின் மீள்சுழற்சி அலகின் ஒரு பகுதியில் கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையின் 126 மில்லியன் ரூபா நிதி ஒத்துகீட்டில், கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.
கழிவு நீர் பரிகரிப்பு திட்டமானது, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசனால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழிவு நீர் பரிகரிப்பு திட்டத்தைச் செயற்படுத்த முன்னின்று உழைத்த யாழ் மாநகர சபை பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.