நுவரெலியாவில் இரண்டு பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பில் எதிர்ப்புக்கள் (காணொளி)

404 0

நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேசத்தில் உருவாக்கப்படும் மேலும் இரண்டு பிரதேச சபைகளினால் அங்கு வாழ்கின்ற இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகள் ஏற்படுவதை எதிர்த்து கினிகத்தேனை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

மலையக முற்போக்கு முன்னணியின் ஏற்பாட்டில் முன்னால் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தாராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கினிகத்தேனை நகரில் முன்னெடுப்பதற்கு ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு ஒன்று பிறபிக்கப்பட்டிருந்தது.

எனினும், நகரில் வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்காமலும்,பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமலும் ஆர்ப்பாட்டத்தை முனனெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பட்டது.

இதில் சுமார் 50ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

அம்பகமுவ பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள மேலும் இரண்டு பிரதேச சபைகளுக்கு எல்லைகள் பிரிக்கப்படும்போது இதுவரை குறித்த பகுதியில் வாழ்ந்து வரும் இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகள் ஏற்பட்ட இடம் இருப்பதாகவும், சிவனொளிபாதமலை ஆலயம் தமிழர் பிரதேசத்திற்கு செல்லும் நிலை உருவாகுவதால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என முன்னால் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தாராஜ் தெரிவித்தார்.

Leave a comment