தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குக் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும், இதனால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு சுமார் 70 முதல் 80 மைல் வேகத்துக்குக் காற்று வீசலாம் என்றும் இதனால் குறிப்பாக, காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் ஏனைய கரையோரப் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்பதால், மீனவர்கள் உட்பட அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்றுமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.