நாடாளுமன்றத்திற்கு குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவேண்டும் என மேற்கொண்டிருந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கொன்றில் முன்னிலையான பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் இன்று பதிலளித்திருந்தார்.
இதன்போது , நாட்டுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை இயற்ற புதிய அரசியலமைப்பின் மூலம் இயலாமல் போயுள்ளதன் காரணமாக நாடாளுமன்றம் பயனற்றது என அவர் தெரிவித்திருந்தார்.