இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஷேய்க் அஹமட் பின் யஸீம் அல்தானி மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை – கட்டார் ஒன்றிணைந்த பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள கட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.