முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகவும் ஜனாதிபதி அலுவலக பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்த காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பேரின் வௌிநாட்டு பயணங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளன.
காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இவர்களின் வௌிநாட்டுப் பயணங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.