நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் – அமைச்சரவை அங்கீகாரம்

483 0
நுவரெலிய மாவட்டத்தின் பிரதேச சபைகளை 6 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அனுமதி கிடைத்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நுவரெலியா பிரதேச சபை அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை ஆகிய மூன்று பிரதேச சபைகளாக அதிகரிக்கப்படவுள்ளது.
அம்பகமுவ பிரதேச சபை மஸ்கெலியா மற்றும் நோர்வூட் ஆகிய மூன்று பிரதேச சபைகளாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்த பிரதேச சபைகள் அதிகரிப்பானது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும் என அதன் இணைத்தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கடந்த 1987ம் ஆண்டு முதல் நுவரெலியா மாவட்டத்திற்கு மேலும் சில பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த போதிலும் ஆட்சியில் இருந்த கடந்த அரசாங்கங்கள் அதனை நிராகரித்து வந்தன.

இந்நிலையில் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருமான மனோ கணேசன் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் பத்திரத்தினை சமர்ப்பித்ததோடு பைசர் முஸ்தபா அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கே அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment