பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் நீண்டகாலமாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
எனினும் குறித்த முகாம் சட்டவிரோதமானது என்பதால், அதனை மூடுமாறு பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி இன்றுடன் மூடப்படவுள்ளது.
ஆனால் அங்குள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
பப்புவா நியுகினியிலேயே நவுறு தீவு உள்ளிட்ட இரண்டு முகாம்களுக்கு அவர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், 600க்கும் அதிகமாக அகதிகள் குறித்த முகாம்களுக்கு செல்ல மறுத்து வருகின்றனர். பப்புவா நியுகினி அதிகாரிகளால் அவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .