அரசியலமைப்பு சபை அரசியல் யாப்புக்கு முரணானது

383 0
அரசியலமைப்பு சபை அரசியல் யாப்புக்கு முரணானது என்பதோடு, அதிகாரமற்றதொன்று எனவும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பிற்கு இணங்க, பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சபையை நியமிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வழிகாட்டல் சபை மற்றும் அரசியலமைப்பு சபை என்பன, அரசியல் யாப்புக்கு முரணானது என்பதோடு, அதிகாரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment