தமிழ் மக்கள் இந்த நாட்டில் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றதை எவராலும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வை இந்த அரசாங்கத்தில் பெற்றுகொடுக்க வேண்டியது அனைவரதுமே பொறுப்பாகும் என நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். வடக்கில் விக்கினேஸ்வரன் சிவாஜிலிங்கமும் தெற்கில் விமல் வீரவன்ச போன்றவரும் நாட்டில் யுத்தத்தை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.