தாஜுதீன், லசன்த கொலை வழக்குகளை ரயல் அட் பார் முறையில் விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.