ராணுவத்தில் சேர போலி சான்றிதழ்

337 0

201608251014266314_Fake-certificate-to-join-the-military-Hunt-for-2-people_SECVPFராணுவத்தில் சேர போலி சான்றிதழ் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட 41 பேர் பிடிபட்டனர். விசாரணையில் கிருஷ்ணகிரி இடைத்தரகர்கள் 2 பேரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது.சான்றிதழ் சரிபார்க்கும் பணியின் போது 110 பேர் இருப்பிட, பிறப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை போலியாக கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் 41 பேர் பிடிப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் என்பதும், இடைத்தரகர்கள் மூலம் போலி சான்றிதழ் பெற்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து ராணுவ கர்னல் அபினாஷ் ஸ்ரீபாரதி திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில் இளைஞர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவை சேர்ந்த பர்கூர் முனியப்பன், செல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டு போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இடைதரகர்கள் 2 பேரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.