சீனாவில் 1000 கிலோமீற்றர் நீளமான சுரங்கம்

342 0

1000 கிலோமீற்றர் நீளமான சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான நவீன தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் சீனாவின் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திபெத்தின் ப்ரம்மபுத்ரா ஆற்றில் இருந்து சீனாவிற்கு நீரைக் கொண்டுச் செல்லும் நோக்கில் இந்த சுரங்கம் அமைக்கப்படவுள்ளது.

சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தை கலிஃபோர்னியாவாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பதாக, கூறப்படுகிறது.

ஆனால் இந்த திட்டத்தினால் ஹிமாலயா பிராந்தியத்தில் கடுமையா சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆசியாவின் பல நீர்வீழ்ச்சிகள், நீர்நிலைகள் என்பன இல்லாமல் போகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a comment