முன்னாள் மீன்பிடி துறை பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன உள்ளிட்ட 6 பேருக்கும் எதிராக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களம் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டாரவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஒருகோடியே 12 லட்சத்திற்கும் அதிகமான பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணையின் போதே இந்த கோரிக்கை முன்னைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி சரத்குமார குணரத்ன கைது செய்யப்பட நிலையில் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.