அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், பப்புவா நியுகினியின் மானஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் உள்ளிட்டவர்கள், தங்களது முகாம் மூடப்படுவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த முகாம் மூடப்படுகிறது.
அங்குள்ள 800 ஏதிலிகள் வரையில் நவுறு தீவிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் இதற்கு எதிராக குறித்த அகதிகள் சார்பில் சட்டத்தரணிகளிலா சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.
இந்த முகாம் மூடப்படுவதானது, அகதிகளின் உரிமைகளை கடுமையாக மீறும் வகையில் அமைந்திருப்பதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.