கண்டி – அங்கும்புர – ரம்புக்கெல பிரதேசத்தில் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் இனந்தெரியாத சிலரால், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தமது பணியினை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே நேற்றிரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த உப காவல்துறை பரிசோதகர் அங்கும்புர மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவத்திற்காக காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்களும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.