போலி விசாவை பயன்படுத்தி நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றம் நேற்று அவர்களுக்கு பிணை வழங்கியது.
இவர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக இத்தாலி மற்றும் ஜெர்மனுக்கு செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் 10 ஆயிரம் ரூபா வீதம் ரொக்க பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் பருத்தித்துறை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.