மத்திய மற்றும் வட ஐரோப்பாவை தாக்கிய பாரிய சூறாவளி காரணமாக குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்கள் ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசின் அதி உயர் மலைப்பிரதேசத்தில் இந்த சூறாவளியின் வேகம் மணிக்கு 112 மைல் வேகத்தில் வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளி காரணமாக போலந்து மற்றும் செக்குடியரசு நாடுகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புக்கள் மின்சார விநியோகம் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேமன் தொடரூந்து தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளமையால், தொடரூந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
போலந்தில் பாரிய விருச்சங்கள் வீழ்ந்த நிலையில் பல நெடுஞ்சாலை போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, இந்த அனர்த்தத்தின் காரணமாக மூன்று நாடுகளை சேர்ந்த பலர் காணாமல் போய் உள்ளதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.