நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தில் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வித்தியாலயத்தின் தஸ்தாவேஜி களஞ்சிய அறை முற்றாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் அறையில் களஞ்சியபடுத்தபட்டிருந்த முக்கியமான ஆவணங்கள் சில பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை மத்திய மகாண சபை உறுப்பினர் ஆர.இராஜாராம் நேரில் சென்று பார்வையிட்டு பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துறையாடியுள்ள நிலையில், சம்பவம் குறித்து நுவரெலியா கல்வி திணைகளத்துடன் தொடர்பு கொண்டு இதனை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.