இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார உலகத்தில் அதிகமானோர் விரும்பும் கிரிக்கெட் வீரராக பல முறைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர் ஒருவரால் கடவுளாக வர்ணிக்கப்பட்டுள்ள விடயமானது இணையங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
தற்போது சங்கா இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணியில் விளையாடி வருவதுடன், குறித்த அணியில் பந்துவீச்சாளரான ஸ்டுவட் மேகர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் சங்காவை கடவுளென குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதியே தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இதனை ஸ்டுவட் மேகர் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்டுவரட்டின் இந்தப் பதிவினை பலரும் பகிர்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.