வட மாகாணம் உள்ளிட்ட 8 மாகாண மக்களுக்கான எச்சரிக்கை

317 0

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையின் காரணமாக, நாளையதினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை அவதான நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழைப் பெய்யக்கூடும்.

குறித்த பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

Leave a comment