புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதை தவிர்த்து, தற்போதுள்ள அரசியல்யாப்பில் தேவையான திருத்தங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, இலங்கை அமரபுர மஹாபீடம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கோரியுள்ளது.
அதன் உயர்பீட மஹாநாயக்கர், வணக்கத்துக்குரிய கொடுகொட தம்மாவாச தேரரின் கையொப்பத்துடன், வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையிலான சரத்துகள், புதிய அரசியல் யாப்பு தொடர்பான வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமரபுர மஹாபீடத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைந்து, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பலவீனப்படுத்தவும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே புதிய அரசியல் யாப்பு தயாரிப்பில் இருந்து விலகி, நாட்டின் தேசிய மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் குறித்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.