இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கீனன் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தன ஆகியோருக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததோடு இலங்கை மற்றும் கனடாவுக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் மேலும் வலுவடைந்துள்ளதாக, இதன்போது கருத்து வௌியிட்ட ருவன் விஜேயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டின் அபிவிருத்திக்கு கனேடிய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புக்களை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு கனேடிய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புக்களை வருங்காலங்களிலும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என, இந்த சந்திப்பின் போது, ருவன் விஜேயவர்த்தன, டேவிட் மெக்கீனனிடம் கோரியுள்ளார்.