இராணுவ அதிகாரியின் வாகனம் மோதி இளைஞன் படுகாயம்!

267 0

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இராணுவத்தின் உயர் அதிகாரி பயணித்த சொகுசு கார், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது மோதியதில் இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உதயலக பிரியதர்சன (21) என்ற அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த இராணுவ அதிகாரி மாங்குளம் இராணுவ முகாமில் உயர் அதிகாரியாக கடமையாற்றுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a comment