முல்லைத்தீவுக் கடற்கரையின் பிரதான இடங்களில் கடலுக்குள் இறங்குவதைத்தவிர்த்துக்கொள்ளுமாறு அபாய எச்சரிக்கை விளம்பரப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அபாய அறிவிப்பு 591 படைப்பிரிவினால் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மையில் முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் மரணமானதை தொடர்ந்து அறிவிப்பு பலகை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.