நிலவும் காலநிலையால் சிறுமி பரிதாப மரணம்

407 0

பேராதனை – கலஹா வீதியில் மஹகந்த ஹல்ஒயா பிரதேசத்தில் வீடொன்றின் மீது கல் ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது பாட்டி காயமடைந்து பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான காலநிலையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், டீ.எம்.உதாரி சேஹாரா என்ற 7 வயதான சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் தரம் இரண்டில் கல்வி கற்று வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் (28) இரவு 8.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீட்டில் முன் அறையில் உறங்கி கொண்டிருந்த குறித்த சிறுமி குளிர் எனக் கூறி  பாட்டியின் அறைக்கு சென்றுள்ள போது, வீட்டின் மேல் பகுதியில் அமைந்திருந்த கல் ஒன்று சரிந்து அவர்கள் இருந்த அறை மீது வீழ்ந்துள்ளது.

இதன்போது சிறுமியின் தலையில் கல் வீழ்ந்துள்ளதோடு, பாட்டியும் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

பின்னர் இருவரும் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் தொடர்பான பிரதே பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Leave a comment