மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைப் படுகொலையின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று ஏறாவூர் சவுக்கடி முருகன் கோவில் வீதியிலுள்ள வீட்டில் இருந்து 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேகத்தில் மூவரை கைதுசெய்து விசாரணைகளுக்குட்படுத்தியதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரதான சூத்திரதாரியை நேற்று மட்டக்களப்பு மாவட்ட புலன்விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.
இதேவேளை இக் கொலை தொடர்பாக சுமார் 80 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகள் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாகவும் 27 பேரிடம் வாக்க மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விசேட புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.