திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் எந்தவித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை. எண்ணெய்க் குதங்கள் குறித்து மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வங்காளவிரிகுடா நாடுகள் வளர்ச்சிகானாது திருகோணமலை வளர்ச்சியடையாது, எனினும் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் திருகோணமலை துறைமுகம் குறித்து ஆலோசித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது திருகோணமலை துறைமுக திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.