அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கை விஜயம்

271 0

அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அவரது குறித்த விஜயத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.

இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையில் இருதரப்பு தொடர்புகள் ஏற்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் தான் இலங்கைக்கு வருவதில் மகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வருடம் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அவுஸ்திரேலிய விஜயத்தின் போது அவர்களை சந்தித்து கலந்துரையாட கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருநாட்டுக்குமிடையில் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பாக ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை நிறுத்த இரு நாடுகளும் இனைந்து செயற்பட வேண்டியதன் முக்கியம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment