சீனியை குறைப்பதற்கு புதிய வரி

274 0

குளிர்பானங்களில் சீனியின் அளவை குறைப்பதற்கு புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனி பாவனையை குறைப்பதற்காக குளிர்பானங்களில் 06 கிராமுக்கு அதிகமாக சீனி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு கிராமுக்கும் ஒரு ரூபா வரி அறவிடப்படும் எனவும் இதற்கு உலக சுசுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற தாதியர் டிப்ளோமா பயிற்சிநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, உயிரிழப்பவர்களில் 70 வீதமானோர் தொற்றா நோய் காரணமாகவே உயிரிழப்பதாகவும் அதனாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment