போதையில் விழுந்திருந்த அமெரிக்க கடற்படை வீரர் பொலிஸாரால் மீட்பு

270 0

அதிக போதை காரணமாக கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் விழுந்திருந்த அமெரிக்க கடற்படை வீரரொருவரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த யுத்த கப்பலில் பணிபுரியும் குறித்த ஊழியர் நேற்று கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தை பார்வையிடச் சென்றவேளை அதிகமாக மதுவருந்தியதால் போதை அதிகரித்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர், குறித்த வீரரை பொலிஸார் அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடாக கடற்படையினரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment