ஐக்கிய தேசிய கட்சியின் திவுலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குறித்த வெற்றிடத்துக்கு முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமறத்தை அவமதித்தமை தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கும் படி மாகல்கந்தே சுதத்த தேரரினால் உச்ச நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.