கார்லஸ் பியுஜ்மன்ட் மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை- ஸ்பெயின்

342 0

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்பெயின் – கட்டலோனிய பிராந்தியத் தலைவர் கார்லஸ் பியுஜ்மன்ட், மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்று ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால் அவர் சிறைக்கு செல்லாதவராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்துக் கொள்ளும் கட்டலோனிய பிராந்தியத்தின் முயற்சி தோல்வியில் நிறைவடைந்தது.

தற்போது குறித்த பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரம் நீக்கப்பட்டு, அதன் முழுக் கட்டுப்பாடும் ஸ்பெயின் அரசாங்கத்திடம் உள்ளது.

தனிநாட்டுக்கான முயற்சியை வழிநடத்தியமைக்காக முன்னாள் பிராந்தியத் தலைவர் கார்லஸ் பியூஜ்மன்ட் உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

இதன்கீழ் அவர்கள் சிறைக்கு செல்வார்களாக இருந்தால், கட்டலோனிய பிராந்தியத்துக்காக நடத்தப்படவுள்ள தேர்தலில் அவர்களால் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment