சவுதி அரேபியா பெண்களிற்கு விளையாட்டு அரங்குகளுக்கு செல்ல அனுமதி

323 0

சவுதி அரேபியாவில் பெண்கள் அனைவரும் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வதற்கு முதன்முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் இந்த அனுமதி அமுலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் தொடர்பான பல இறுக்கமான சட்டங்களை பின்பற்றி வரும் சவுதி அரேபியா, அண்மைக்காலமாக அந்த இறுக்கமான விதிமுறைகளை தளர்த்தி வருகிறது.

இதுவரையில் பெண்களுக்கு வாகனங்கள் செலுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி தற்போது பெண்கள் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment