அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது- பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

281 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒன்றியத்தின் பதில் இணைப்பாளர் மங்கல மத்துமகே இதனை தெரிவித்தார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்க கோரி கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுவரும் சத்தியாகிரக கூடாரத்தில் வைத்து இன்று அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பில் சைட்டம் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவம் தற்சமயம் கூடி ஆராய்ந்து வருகின்றது.

எவ்வாறாயினும் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனை ஊடகங்களில் ஊடாகவே அறிந்துக்கொண்டதாகவும் சைட்டம் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a comment