மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

303 0

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவரது கடவுச்சீட்டை இன்று நீதிமன்றத்தில் சமர்;ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த கடவுச் சீட்டு இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்க்படாதநிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மகிந்தானந்த அலுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டபோது, பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட கரம் பலகை மற்றும் தாம் பலகைகளை வேறுநபர்களுக்கு வழங்கியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

Leave a comment