சிலாபம் புத்தளம் வீதியின் காவலரண் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெப் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கெப் ரக வாகனத்தில் பயணத்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.